Tuesday 8 May 2018

மாடுகளுக்கான பொது மேலாண்மை முறைகள் பகுதி - 4

பண்ணை விலங்குகளை அடையாளம் காணுதல் :

1. பண்ணை விலங்குகளை அடையாளம் காண்பதற்கான காரணங்கள்
2. ஆண்மை நீக்கம் செய்வதற்கான காரணம்
3. ஆண்மை நீக்கம் செய்யும் முறைகள்

ஒரு பண்ணையிலுள்ள விலங்குகளைக் கண்டறிய பண்ணையிலுள்ள ஒவ்வொரு விலங்கையும் அடையாளம் காண்பது மிகவும் அவசியமாகும்.

பண்ணை விலங்குகளை அடையாளம் காண்பதற்கான காரணங்கள் :

* விலங்குகளின் இனப்பெருக்கத்திறனைப் பதிவு செய்வதற்காக

* தனித்தனியாக ஒவ்வொரு விலங்கிற்கும் தீவனம் அளிக்க

* பால் கறக்கும் போது அடையாளம் காண

* விலங்குகளை விற்கும் போதும்,கண்காட்சிகளின் போதும், பந்தயங்களின் போதும் அடையாளம் காண

* விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கவும், சினைப் பருவத்தில் இருப்பதைக் கண்டறியவும், மற்றும் இதர செயல்முறைகளுக்காக

விலங்குகளை அடையாளம் காணும் முறைகள் :

* கழுத்து சங்கிலி அல்லது கழுத்து கயிறு
* கால் வளையம்
* நெஞ்சுப்பகுதியில் தோடு போடுதல்
* வால் பகுதியில் தோடு போடுதல்
* சாக் அல்லது கிரீஸ் மூலம் அடையாளமிடுதல்
* கருப்பு அல்லது வெளிர் நிற பெயிண்ட்கள் மூலம் அடையாளமிடுதல்
* படங்கள் மற்றும் வரைபடங்கள்
* புகைப்படம் எடுத்தல்
* காதுகளைத் துளையிடுதல்
* பிராண்டிங்
* குளிர் அல்லது உறைதல் முறைகள் மூலம் அடையாளமிடுதல்
* சூடான இரும்பு மூலம் அடையாளமிடுதல்
* காதுகளில் அடையாளத் தோடு போடுதல்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1. காதுகளில் பச்சை குத்துதல் :

இது ஒரு நிலையான விலங்குகளை அடையாளம் காணும் முறையாகும்.

தேவைப்படும் உபகரணங்கள் :

பச்சை குத்தும் ஃபோர்செப்ஸ், பச்சை குத்தப் பயன்படும் எண்கள் அல்லது எழுத்துகள் பச்சை குத்தப் பயன்படுத்தும் இங்க் அல்லது பசை

செயல்முறை :

* பச்சை குத்தும் ஃபோர்செப்ஸில் எண்கள் மற்றும் எழுத்துகளைப் பொருத்த வேண்டும்.

* பச்சை குத்தும் இடத்தை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

* பச்சை குத்தும் இடத்தை ஆல்கஹால் கொண்டு துடைக்க வேண்டும்.

* பச்சை குத்தும் ஃபோர்செப்ஸை பச்சை குத்தும் இடத்தில் பொருத்தி, அதிலுள்ள எண்கள் மற்றும் எழுத்துகள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

* பிறகு ஃபோர்செப்ஸை அழுத்தி ஓட்டை போட வேண்டும்.

* பிறகு பச்சை குத்தப் பயன்படும் இங்க் அல்லது பசையினை ஓட்டையிட்ட இடத்தில் தடவ வேண்டும்.

2. காதுகளில் அடையாளத் தோடு போடுதல் :

இது ஒரு பிரபலமான விலங்குகளை அடையாளம் காணும் முறையாகும்.

தேவையான உபகரணங்கள் :

ஓட்டை போடும் ஃபோர்செப்ஸ், மற்றும் அடையாளத் தோடுகள்.

செயல்முறை :

* அடையாளத் தோட்டை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். (ஒன்று அல்லது இரண்டு பகுதிகள்)

* கால்நடைகளின் தோல் நிறத்திற்கு எதிர் நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* அடையாளத் தோட்டினை ஃபோர்செப்ஸில் பொருத்த வேண்டும்.

* காதில் தோடு போடும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.(தோடு போடும் இடம் காதின் அடிப்பகுதிக்கும் நுனிப்பகுதிக்கும் இடையில் இருக்க வேண்டும்)

* ஓட்டை போட முடியாத தோடுகளாக இருந்தால் தோடு போடும் கருவியால் முதலில் காதில் ஓட்டை போட வேண்டும்.

* பிறகு தோட்டினை காதில் பொருத்த வேண்டும்.

3. பிராண்டிங் அல்லது சூடு போடுதல் :

இது ஒரு நிலையான அடையாளமிடும் முறையாகும்.

சூடான இரும்பு மூலம் சூடு போடுதல் :

சூடான இரும்பு மூலம் அடையாளமிடுதல் ஒரு தெளிவாகக் தெரியக் கூடிய, எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு அடையாளமிடும் முறையாகும். ஏனெனில் சூடான இரும்பு கால்நடைகளின் தோலில் இருக்கும் முடியின் அடிப்பகுதியினை அழித்து விடுவதால், நிலையான எளிதில் தெரியக் கூடிய முடியற்ற தழும்பினை ஏற்படுத்துகிறது.

தேவையான பொருட்கள் :

சூடு போடும் இரும்புக் கம்பி, மின்சாரம் மூலம் சூடாகும் இரும்பு, மாடுகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் கிட்டி

செயல்முறை :

* சூடு போடப் பயன்படும் உபகரணத்தை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

* சூடு போடும் இரும்பினை நன்றாக சூடு படுத்த வேண்டும்.

* சூடு போடுவதற்கு முன்னால் விலங்கினைக் கட்டுப்படுத்த வேண்டும்.

* சூடு போடும் இரும்பின் வெப்பநிலையினை பரிசோதிக்க வேண்டும்.

* பிறகு சூடாக்கிய இரும்பினை கால்நடைகளின் உடல் மீது வைத்து நன்றாக ஆட்ட வேண்டும்.

* சூடான இரும்பினை கால்நடைகளின் உடலில் 3-5 நொடிகள் வைத்திருக்க வேண்டும்.

* சூடு போட்ட இடம் தூரத்திலிருந்து பார்க்கும் போதே கண்டு பிடிக்குமாறும், எழுத்துகளுக்கு இடையில் 2.5 செமீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எழுத்துகளுக்கு இடையில் இடைவெளி 2.5 செமீ இருந்தால் தான் அவற்றுக்கு நடுவிலுள்ள தோல் விழாமல் இருக்கும்.

* சூடு போட்டதால் ஏற்பட்ட புண் சரியாக ஆண்டி செப்டின் மருந்தினைத் தடவ வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உறையும் முறை மூலம் சூடு போடுதல் :

குளிர்ந்த இரும்புத் தகடைக் கொண்டு கால்நடைகளின் தோலில் சூடு போடுவதால், அவற்றின் தோலில் உள்ள நிறமிகள் சேதமடைந்து விடுவதால் சூடு போட்ட இடத்தில் வெள்ளை நிற முடிகள் முளைக்கும். இதனால் எளிதாக கால்நடைகளை அடையாளம் காணலாம்.

தேவையான உபகரணங்கள் :

* சூடு போடும் இரும்பினைத் தயராக வைத்துக்கொள்ள வேண்டும்.

* திரவ நைட்ரஜன் அல்லது திட ஐஸ் (திட கார்பன் டை ஆக்சைடு) மூலம் இரும்பினைக் குளிர்வித்துக் கொள்ள வேண்டும்.

* சூடு போடுவதற்கு முன்பாக கால்நடைகளை நன்றாகக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

* சூடு போடும் இடத்திலுள்ள முடியை நறுக்கி விட வேண்டும். பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து பிறகு ஆல்கஹால் தடவ வேண்டும்.

* முடியினை நறுக்கியுள்ள இடத்தில் குளிர்வூட்டப்பட்ட இரும்பினை வைத்து தோலில் சமமாக படுமாறு சீரான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

* சூடு போடும் நேரம் 30 செகண்டுகள் முதல் 1 நிமிடம் வரை.

காதுகளை நறுக்குதல் :

* இந்த அடையாளமிடும் முறை பன்றிகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு அடையாளமிடப் பின்பற்றப்படுகிறது.

* கால்நடைகளின் காதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆங்கில எழுத்து ‘வி’ வடிவத்தில் கத்தரிக்கோல் அல்லது அதற்கான உபகரணத்தைப் பயன்படுத்தி நறுக்கி அடையாளமிடப்படுகிறது.

* எடுத்துக்காட்டாக வலது காதின் அடிப்பகுதியில் நறுக்கப்பட்டிருந்தால் எண் 1, இடது காதின் அடிப்பகுதியில் நறுக்கப்பட்டிருந்தால் எண் 3.

ஆண்மை நீக்கம் செய்தல் :

* ஆண் விலங்குகளை இனப்பெருக்கம் செய்ய முடியாமல் செய்தல் ஆண்மை நீக்கம் செய்தலாகும்.

* இந்தியாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட காளைகள் விவசாய வேலைகளுக்குப் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

* நெல் விளையும் பகுதிகளில் எருமைகள் வேலைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

* வேலைக்காக உபயோகப்படுத்தப்படும் காளை மாடுகள் மற்றும் எருமைக்காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யவேண்டும்.

ஆண்மை நீக்கம் செய்வதற்கான காரணம் :

* விலங்குகளை அமைதிப்படுத்த

* விலங்குகளின் உடல் எடையினை விரைவில் அதிகரிக்கச்செய்யவும், அவற்றின் இறைச்சியின் தரத்தினை மேம்படுத்தவும் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.

* முறையற்ற இனப்பெருக்கத்தினைத் தடுக்க

* இனப்பெருக்க உறுப்புகளின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க

* வேலைக்காகப் பயன்படுத்தப்படும் மாடுகளில், அவற்றின் கழுத்துகள் நீண்டு, வண்டிகளைப் பொருத்தும் மாடுகளின் முதுகின் மேற்பகுதி நன்றாக அமையவும் ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஆண்மை நீக்கம் செய்யும் முறைகள் :

பர்டிசோ முறை :

* இம்முறை இரத்தம் வெளியேறாத ஆண்மை நீக்க முறையாகும். பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஆண்மை நீக்கம் செய்யும்போது விரைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பெர்மாட்டிக் குழாயினை நசுக்கி விடுவதால் விரைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு விரைகள் சுருங்கி விந்துகளின் உற்பத்தி தடை செய்யப்படுகிறது.

* ஆண்மை நீக்கம் செய்வதற்கு முன்பாக முதலில் கால்நடைகளை அசையாமல் நன்றாகக் கட்ட வேண்டும்.

* விரைப்பையின் ஒரு பக்கமாக விரைப்பைக்குச் செல்லும் குழாய்ப் பகுதியை நகர்த்தி, விரைகளுக்கு 3-5 செமீ மேற் பகுதியில் பர்டிசோ ஆண்மை நீக்கக் கருவி மூலம் ஸ்பெர்மாட்டிக் கார்ட் எனப்படும் விரைகளுக்குச் செல்லும் குழாயினை நசுக்கி விட வேண்டும்.

* பிறகு முதலில் நசுக்கிய இடத்திற்கு ஒரு செமீ கீழ் மீண்டும் நசுக்க வேண்டும்.

* இது ஒரு பாதுகாப்பான, விரைவான, நுண்கிருமிகளின் தாக்குதல் குறைவாக ஏற்படக்கூடிய ஒரு ஆண்மை நீக்க முறையாகும்.

திறந்த முறை அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்தல் :

* இம்முறையில் விரைப்பையினை அறுவை சிகிச்சை மூலம் திறந்து, விரைகளை அகற்றிவிட்டு அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண்ணை ஆண்டிசெப்டிக் மருந்து தடவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இளங்காளைகளில் பொதுவாக ஸ்பெர்மாட்டிக் காரட் பகுதியினை முறுக்காமல் நறுக்கப்படுகிறது. ஆனால் வயது முதிர்ந்த இளங்காளைகளில் ஸ்பெர்மாட்டிக் கார்ட் பகுதியினை முதலில் நன்றாக முறுக்கி விட்டுப் பிறகு நறுக்கப்பட வேண்டும்.

எலாஸ்டேட்டர் அல்லது ரப்பர் வளையம் முறை :

* இம்முறையில் உறுதியான ரப்பர் வளையம் கன்றுகளின் இளம் வயதிலேயே ஸ்பெர்மாட்டிக் கார்ட் பகுதியைச் சுற்றிப் பொருத்தப்படுகிறது.

* இந்த ரப்பர் வளையத்தால் ஏற்படும் தொடர்ந்த அழுத்தத்தின் காரணமாக விரைகள் அளவில் சிறியதாகி விடும். பிறகு ரப்பர் வளையம் கீழே விழுந்து விடும்.

* எலாஸ்டேட்டர் மூலம் ஆண்மை நீக்கம் செய்வது கன்றுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தும் என்பதால் இம்முறை பொதுவாக பின்பற்றப்படுவதில்லை.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment