Sunday 27 May 2018


புங்கை மரம் பற்றிய தகவல்கள் :

தென் இந்தியாவை தாயகமாக கொண்டது புங்கன் மரம். புங்கை, புங்கு, பு+ந்தி, சுரஞ்சகம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. புங்கை மரம் தமிழ்நாட்டின் பழமையான மரங்களில் ஒன்று.

காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. புங்கன் மரம் அதிக உயரம் வளர்வது இல்லை. மெதுவாக வளரும் தன்மை உடையது.

விதை மூலம் இனப்பெருக்கம் செய்வது அதிகம். ஆனால் குச்சிகளை கொண்டும் வளர்க்கப்படுகின்றன. அதிவேக புயல் காற்றில் கூட சாயாமல் இருக்கும். ஆணிவேர் நீளமாக காணப்படும்.

வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூ போன்று காணப்படும். இம்மரப் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயனளிக்கிறது.

புங்கன் விதையில் இருந்து கிடைக்கும் புங்க எண்ணெய், பூச்சி விரட்டியாகவும், பயோ டீசல் ஆகவும், மாடுகளுக்கு கோமாரி நோயால் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கும் பயன்படுகிறது.

குறிப்பாக நிழல் பயன்பாட்டிற்காக மட்டுமே புங்கன் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த பயன் மட்டுமன்றி இயற்கை விவசாயத்திற்கு பசுந்தாள் உரமாக முக்கிய பங்கு வகிக்கிறது.

இலைகள் கசப்பு தன்மை உடையதால் இவற்றை மண்ணில் இடும் போது இளம் வயதில் பயிர்களை தாக்கும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்தப்படியாக புங்க மரம் உள்ளது. இது மட்டுமன்றி இலைகள் சிறிது தடித்து காணப்படும். புங்கன் மரங்களில் இலைகள் அடர்த்தியாக இருப்பதால் வெயில் காலங்களில் மிக குளிர்ச்சியான நிழல் தரும்.

இளவேனில் காலத்திற்கு முன்பே இலைகளை உதிர்க்கும், இதனால் நிழலுக்காக அதிகம் நடப்படுகின்றன. இவற்றின் இலைகள் மண்புழு உரம் தயார் செய்யப் பயன்படுகிறது. மரக்கட்டைகள் எரிபொருளாக பயன்படுகிறது.

புங்கன் புண்ணாக்கு தழைச்சத்து மிக்க உரமாக உள்ளது. இவற்றை நாம் கண்டிப்பாக சாலைகள் ஓரங்களில் நடுவதன் மூலம் சரியான பருவத்தில் சரியான மழை பெய்யும்.

பல பறவைகள் விரும்பி இம்மரங்களில் கூடு கட்டுகின்றன. காரணம் இலைகள் அடர்த்தியாக இருப்பதால் அவற்றிற்கு எதிரிகள் தொல்லை முற்றிலும் இருக்காது. அணில் போன்ற சிறு விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment