Wednesday 2 May 2018

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளை தடுப்பதற்கான வழிகள் :

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம்.

காட்டுப்பன்றி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடி திருத்தகத்திலிருந்து முடியை சேகரித்து வயல் முழுவதும் இரைத்து விடுவதன் மூலம் தடுக்கலாம்.

குரங்கு சேதத்தை குறைக்க வயலில் பல இடங்களில் உணவுப்பண்டங்களில் அதிக காரம் (மிளகாய் தூள்) கலந்து பரவலாக தூவி விடுவதன் மூலம் குரங்கு ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை வராது.

மேற்கூறிய இந்த தகவல் மூன்றையும் ஹைதராபாத்திலுள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் பயிற்சியின் போது விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளாகும்.

தகவல் :
திரு.S.அசோகன்,
தோட்டக்கலை உதவி இயக்குநர்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment