Tuesday 22 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 5

நாய்க்குட்டிக்குப் பயிற்சி அளித்தல்
பயிற்சி கொடுக்கும் முறை :

1. அதனுடைய இடத்தைப் பழக்குதல்
2. கோதிவிடப் பழகுதல்
3. காது சுத்தம் செய்யவும், குளிப்பாட்டவும் பழக்குதல்
4. நகம் நறுத்துதல்
5. உண்ணிப் பரிசோதனை
6. வீட்டு வழக்கம்
7. கழிப்பிடம்
8. உணவு மறுத்தல்

நாய் வளர்க்க விரும்புகிறவர்கள், சரியான இன நாய் குட்டிகளை வாங்குவதும் அவற்றுக்கு முறையாக பியற்சி அளிப்பதும் முக்கியம். நாய்க் குட்டிகள் தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் முன் பின் விளைவுகளை நன்கு அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் குட்டியைத் தேர்ந்தெடுத்துவிட்டு அப்புறம் வளர்க்க முடியவில்லை என்று தெருவில் விட்டுவிடுகின்றனர். இதன் மூலம் தெரு நாய்கள் அதிகமாவதற்கு நாமே காரணமாகிறோம்.

பயிற்சி கொடுக்கும் முறை :

நாயை நல்லமுறையில் பயிற்சி கொடுத்து வளர்க்க வேண்டும். வாழுகின்ற இடம், உணவு, பழக்கவழக்கங்கள், நடத்தப்படும் முறை இவற்றைப் பொறுத்து நாய்களின் குணங்கள் மாறுபடும். 8 முதல் 12 வார காலத்திலிருந்தே எளிய பயிற்சியையும், ஆறு மாதங்களுக்குப் பிறகு கடினமான பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.

நாய்க்குட்டிகளின் கீழ்ப்படியும் திறனை உருவாக்க கீழ்க்கண்ட அடிப்படை வழிமுறைகளைக் கையாளலாம்.

1. உட்காரு கீழே

2. அடையாதே (இரு)

3. அழைத்தல் (வா, இங்கே, உள்ளே)

4. கட்டுதல் (கழுத்துப்பட்டை, கயிறு)

5. நிற்கவைத்தல்

மேற்கண்ட பயிற்சியினைப் பொறுமையாக மேற்கொள்வதுடன், தவறுகளைத் திருத்தும்போது கட்டாயப்படுத்துதல் மற்றும் வன்முறைகள் கூடாது. அவ்வாறு செயல்பட்டால் அவற்றின் உயரிய பண்புகள் மாறுபாடு அடைவதுடன், நாம் இடும் பணிகளை நிறைவு செய்யும் ஆர்வம், ஈடுபாடு வெகுவாகப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் நாய்களுக்கு மன அழுத்தம் மற்றும் கோபம் பகைமை உணர்வு உருவாகும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

நாய்களின் தேவையற்ற, விரும்பத்தகாத நடவடிக்கைகள் இருப்பதாக அறிந்தால் மட்டுமே வளர்ப்பாளர் (அ) பயிற்சியாளர் அவற்றைக் கண்டிப்பதுடன் பயிற்றுவிக்கலாம்.

பொதுவாக நாய்க்குட்டிகள் பிறந்த 8 மாதங்களுக்கு பின்னர் அதன் உடல் திறன், கூர்ந்து கவனித்தல் மற்றும் ஒத்துழைத்தல் அடிப்படையில் நாம் இடும் கட்டளைகளைப் புரிந்து கற்றுக் கொள்கின்றன.

அதனுடைய இடத்தைப் பழக்குதல் :

நாம் அனைவரும் இருக்கும்போது நம்முடன் பழகவும், விளையாடவும் விட வேண்டும். அதற்கென ஓர் இடம் ஒதுக்க வேண்டும். குட்டிகளே சென்று குளிர்ச்சியான இடத்தில் படுத்துக் கொள்ளும். அனல் தெளியாதவாறும் தண்ணீர் தேங்கி நிற்காதவாறும் ஓர் இடம். குட்டிகள் தூங்கும் பொழுது யாரும் தொல்லை தராதவாறும் நாய்களுக்குக் (செல்லப் பிராணிகளுக்கு) கூண்டு அமைப்பது மிகவும் முக்கயிமாகும். செல்ல நாய்க்குட்டிகளைச் சிறிது நேரம் முறையாக அதற்குப் புரிய வைத்து இது உன்னோட இடம் என்பது போல் பழக்கப்படுத்தினால் இது வெகுவிரைவிலேயே புரிந்து கொண்டு அதன் இடத்தில் இருக்கப் பழகிக்கொள்ளும். அப்படி இல்லையேல் நாம் படுக்கும் இடத்திலேயே படுக்க வைத்துப் பழக்கப்படுத்தினால் நாம் குட்டியைத் தனியாக விட்டு வெளியே செல்வோமானால் துணையாக யாரும் இல்லை என்று கத்திக் கொண்டே இருக்கும். மற்றவர்களுக்கும் வளர்ப்பவருக்கும் இது தொல்லையாக இருக்கும்.

நம் செல்லக் குழந்தைகள் போல இந்த நாய்கள் 10 முதல் 12 ஆண்டுகள் வரை நம்முடன் இருக்க போகின்றன. எனவே கூண்டு தேர்வு செய்யும்போது அதற்குத் தகுந்தாற்போல் தேர்வுசெய்தல் மிகவும் அவசியமாகும். நல்ல காற்றோட்டமாகவும், யாரும் இடையூறு செய்யாத வண்ணம் நாய்க் கூண்டு இருப்பது நல்லது. தண்ணீர்த் தேங்காதவாறு அமைத்தல் மிகவும் நல்லது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த இடத்தில் கழுவ டெட்டால் மற்றும் பினாயில் போடுதல் கூடாது. அப்படி போட்டாலும் நன்றாகக் காய்ந்த பிறகே செல்லப்பிராணிகளை அதனுள் விடுதல் அவசியம். தனிப்பட்ட கூண்டுகள் என்றால் உண்ணிப் பராமரிப்பு அவசியமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கோதிவிடப் பழகுதல் :

செல்லப்பிராணிகள் தங்கள் குழந்தைகளோடு கொஞ்சுவதும் மற்றும் விளையாடுவதும் மிகவும் அவசியமாகும். குட்டிகளாக இருக்கும் பொழுது உடலை நன்கு தேய்த்து வருடிவிட்டு முடிகளைக் கோதிடச் செய்யப் பழக்கிட வேண்டும். காரணம் செல்லக்குட்டிகள் வளர வளரத் தேய்க்கவும் கோதிவடச் செய்யவும் காண்பிக்காது. கால்களைப் பரிசோதனை செய்ய விடாது. மற்றும் காதுகளைத் தூய்மை செய்ய விடாது. கண்களைத் துடைக்கவிடாது. ஆதனால் 60 நாள் வயதிலிருந்தே குட்டிகளுக்கு விரல் மசாஜ் செய்வது முகம், காது, கண் மற்றும் கால் இடுக்குகளில் உண்ணிகள் மற்றும் அழுக்குகளை எடுத்து அதனைத் தொட்டால் கடிக்காமல் காண்பிக்க வேண்டும் என்பது போல் பழக்கப்படுத்துதல் அவசியமாகும். நாய்க் குட்டிகளுக்கு வெறிநோய்த் தடுப்பு ஊசி போட்ட பின்பு வெளியில் நடைப் பயிற்சி மற்றும் பயிற்சி செய்த பிறகு பிரஷ் (டீசரளா) போட்டுக் கோதிவிடுதல் அவசியம். பிரஷ் போடுவது ஏன் என்றால், எந்த ஒரு நாயாக இருப்பினும் வருடத்திற்கு இரண்டு முறை தட்பவெட்ப நிலைகளுக்கத் தகுந்த மாதிரி முடி உதிர்தல் நடைபெறும். அது போன்ற சமயங்களில் வீடுகளின் உள்ளேயே முடிகள் உதிர்ந்தால் கனமான முடிகள் கீழே விழுந்து விடும். மெல்லிய முடிகள் காற்றில் பறக்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இந்த முடியால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் ஒதுக்குப்புறமாக இடம் தேர்வு செய்து சீப்பு, தூரிகைகளைக் கொண்டு உடல் முடிகளைக் கோதி விடுதல் அவசியமாகும். இதனைக் காலையும் மாலையும் செய்தல் வேண்டும்.

காது சுத்தம் செய்யவும், குளிப்பாட்டவும் பழக்குதல் :

மறவாமல் 5 முதல் 6 நாள்களுக்கு ஒரு முறை காதைச் சுத்தம் செய்தல் மிகவும் இன்றியமையாதது. ஒரு சிலர் என் நாய்க் குட்டிகளை நான் தினந்தோறும் குளிப்பாட்டுகிறேன். ஆனால் நாற்றம் அடிக்கிறது என்று கூறுவார்கள். காதில் உள்ள அழுக்குகளைக் தூய்மை செய்யாததால் தான் அந்த நாற்றம் வரும்.

நகம் நறுத்துதல் :

நகங்கள் பெரிதாக வளரும். நாம் விளையாடும் பொழுது நம்மீது நகக்கீரல்கள் ஏற்படும். மருத்துவரைக் கொண்டு நகங்களை நறுக்குதல் அவசியமாகும். எப்படி நறுக்குவது என்று தெரியாமல் நாமே நகங்களை வெட்டக்கூடாது. காரணம் நகத்தோடு சதையும் சேர்ந்து இருக்கும், கவனமாக நகம் நறுக்க வேண்டும்.

உண்ணிப் பரிசோதனை :

நாயின் கால் இடுக்குகள், உட்காரும் பகுதி, கழுத்து, காது ஆகிய இடங்களில் உண்ணிகள் அதிகம் காணப்படும். வெளியில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்று வந்த உடன், கோதி விடும்போது உண்ணிப் பரிசோதனை செய்து, உண்ணிகளை எடுத்து நசுக்காமல் டப்பாவில் பாதி வரை மண்ணெண்ணெய் ஊற்றி அதில் உண்ணிகளை போடுதல் அவசியமாகும். உண்ணிகளை நசுக்கக் கூடாது. வெயில் காலங்களில் உண்ணிகள் இனப்பெருக்கம் செய்யும், மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணி நீக்க மருந்து அளித்து அகற்றலாம்.

வீட்டு வழக்கம் :

நாய்க்குட்டி பிறந்த 40 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை அவற்றிக்கு நாமே கற்றுக் கொடுக்கும் முறைக்கு வீட்டு வழக்கம் என்று பெயர். அவற்றைக் கூப்பிடும் முறைகளை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும். அதாவது செல்லக் குட்டிகளுக்குப் பேர் சொல்லி அழைத்தால் இயல்பான குரல் ஆகவும் குட்டிகள் ஏதாவது தவறு செய்து விட்டால் தவறைச் சுட்டிக்காட்டும் விதத்தில் கட்டளைக் குரல் ஆகவும் இருக்கும். நம் கண்களில் கோபம் தெரிவது போலப் பார்க்கும்போது செல்லப் குட்டிகளுக்குத் தான் செய்வது தவறு என்பதை மனதில் பதிய வைக்க இது அவசியமாகும். கண்ணாலே பார்த்துக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். செல்லக்குட்டிகள் சமத்தாகச் சொன்ன பேச்சைக் கேட்டால் அதற்குப் பாராட்டு தரும் வகையில் உற்சாகக் குரலில் நல்ல பையன் அல்லது நல்ல பெண் என்று கூறுவது அவசியமாகும். அந்த மூன்று வகைக் குரல்கள்தான் நாய்ப் பயிற்சியில் முறையானதும் முக்கியமானதுமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கழிப்பிடம் :

ஒரு நாய்க்குட்டி இன்று காலை சிறுநீர், மலம் கழிக்க எந்த இடத்தைத் தேர்வு செய்கிறதோ அந்த இடத்தில் தான் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கப் போகும். அது நாம் இருக்கும் வீடாக கூட இருக்கலாம். அதனால் நமக்கு அருவருப்பு மற்றும் கோபம் வரும். ஆனாலும் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்துத் தான் ஆக வேண்டும். அதற்கு என்று நேரம் ஒதுக்கி அரை மணி நேரம் முன்னதாக நாய்க்குட்டியைக் கூட்டிக் கொண்டு வெளியில் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் மலம் கழிக்க உரிய இடத்தைத் தேர்வு செய்து பழக்க வேண்டும். நாய்க் குட்டிகள் மலம் இருந்த பிறகு திரும்ப அழைத்து வருவது அவசியமாகும். தினமும் அவ்வாறு பழக்கிப் பின்பு அதன் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வெளியில் கூட்டிச் சென்றால் நாளடைவில் குட்டிகள் கற்றுக் கொண்டு வெளியல் செல்ல ஆரம்பிக்கும்.

ஒரு சில குட்டிகள் மலம் கழித்து அதனை மிதித்து உலுப்பி இருக்கும். உண்மையில் இது இரவே மலம் கழித்து நடக்கும்பொழுது அந்த இடத்தைப் பாழ்படுத்திவிடும் நாம் சென்று பார்க்கும்பொழுது கோபம் வந்து குட்டியை அடித்துவிடுவோம். அது மிகவும் தவறு. காரணம் நாய்க் குட்டிகள் இரவு மலம் கழித்திருக்கும். காலையில் நாம் பார்த்து அடிப்பது எதற்காக என்று அந்தக் குட்டிக்குப் புரியாது. அது போன்று தண்டனை கொடுக்க கூடாது.

நாய்க் குட்டிகள் மலம் கழிக்க மனிதனைப் போல் உடனே சென்றுவிடாது. இது சுற்றிலும் நுகர்ந்து பார்த்துப் பிறகு தான் மலம் கழிக்கும். உரிய நேரத்தில் நாய்க் குட்டியை வெளியில் அழைத்துச் சென்று மலம் கழிக்கப் பழக்கப்படுத்துதல் அவசியமாகும். இது மாதிரி செய்யும் பொழுது நாய்க் குட்டிகள் வீட்டில் உள்ளே மலம் கழிக்காது.

முடியும் வரை நாய்க் குட்டிகளைக் கட்டிப் போடாமல் கழுத்தில் கயிற்றைப் போட்டு பழக்கப்படுத்துவார்கள். அப்படிப் பழகும்பொழுது கால் வளையாது, சரியாக விளையாடாது. அப்படியே விளையாடினால் கயிற்றைப் பிடித்துக் கட்டுப்படுத்தும்போது நாளடைவில் குட்டிகள் புரிந்து கொண்டு தவறுகளைத் திருத்திக்கொள்ளும்.

கண்ட பொருள்களைக் கடிக்கும் அந்த வயதில் பற்களால் எதையாவது கடிக்க வேண்டும் போல் இருக்கும். நாம் கேரட் மற்றும் மாட்டு எலும்பு கடிக்க முடியாத எலும்புகளைப் போட்டால் அதனைக் கடித்துக் கொண்டு இருக்கும். எந்தப் பொருளையாவது கடித்தால் அதனைக் கடிக்கக் கூடாது என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டும். நாம் இருக்கும்போது பொருள்களை ஒன்றும் செய்யாது. நாம் அப்படி இப்பச் செல்லும்போது பொருள்களைக் கடிக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் மறைந்து இருந்து பார்ததுக் கடிக்கக் கூடாது என்று கட்டளை இடும்போது பொருள்களை வீணாக்காமல் கடிப்பதை நிறுத்தி விடும்.

உணவு மறுத்தல் :

ஒரு நாள் பாதுகாவலில் மற்றும் அனைத்து வேலைகளிலும் மிகச் சிறப்பாக இருந்தாலும் யாராவது ஒருவர் கொடுக்கும் நஞ்சு உணவைச் சாப்பிட்டு விட்டால் அது கற்றது அனைத்தும் வீண். அது போல நாய்க் குட்டிகள் கீழே கிடக்கும் பொருள்களை எந்த காரணத்தைக் கொண்டும் சாப்பிடக் கூடாது. காரணம் காகம் தூக்கி வந்து போடும் கோழி மற்றும் மீன் எலும்புகள் நச்சுத்தன்மை உடையன. தனை நாய்க் குட்டிகள் சாப்பிட்டால் பலவித உபாதைகளுக்கு உள்ளாகி மரணம் ஏற்படும். வீட்டில் வளர்க்கும் நாய்கள் பெரும்பாலும் நஞ்சான உணவை உண்டு இறக்கின்றன.

எனவே கீழே உள்ள பொருள்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் நாய்க் குட்டிகள் சாப்பிடக் கற்றுக் கொடுக்கக் கூடாது. பிஸ்கட்டைத் தூக்கிக் கீழே போடுவது ஆகியவற்றை நாம் செய்யக்கூடாது. நாய்க் குட்டிகள் கீழே உள்ள பொருள்களைச் சாப்பிட்டால் உடனே தவறான செயல் எனக் கண்டிக்க வேண்டும். அந்த உணவைச் சாப்பிட விடாமல் செய்ய வேண்டும்.

நாம் உண்ணும் பொருள்களைப் கீழே போட்டு விட்டு மறைந்து இருந்து அதனை நாய் சாப்பிட முயற்சிக்கிறதா என்று பார்த்து, வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். அதே சமயம் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் உள்ளங்கையில் வைத்துக் குட்டிகளுக்குச் சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் நாய்க் குட்டிகள் வேகமாகக் கவ்வும்போது பல் படாது காயமும் ஆகாது.

வெளியாள்கள் சாதாரணமாகக் கொடுக்கும் உணவை நாய்க் குட்டிகள் வாங்காமல் இருக்க பழக்க வேண்டும். அதற்கான பயிற்சிகளையும் நாம் கொடுக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment