Monday 28 May 2018

செலவில்லாத இயற்கை விவசாயம் !!

* இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவும், செய்ய ஆவலுடன் இருக்கும் நண்பர்களுக்காகவும் ஒரு சின்ன அறிவுரை.

* பல நாட்களாக விவசாயிகளின் மனதில் இருக்கும் விஷயங்களில் ஒன்று இயற்கை விவசாயமாகும். பலரும் விவசாயம் செய்ய ஆசைப்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாயம் செய்வதை விட்டு விட்டு வெளி ஊர்களுக்கு செல்கின்றனர்.

* மேலும் சிலர் என்னதான் நஷ்டம் வந்தாலும், விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

* இவை அனைத்தும் நடக்க ஒரே காரணம் என்னவென்றால் இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அதிகமாக செலவு செய்வதால் தான். அதற்கு மாற்றாக அதிகமான செலவு செய்யக் கூடாது என முடிவு எடுக்க வேண்டும்.

* இயற்கை விவசாயத்திற்கு ஆகும் செலவை எப்படி எல்லாம் குறைக்கலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

* இயற்கை விவசாயம் செய்யப் போகும் விவசாயிகள் முதலில் மானவாரி பயிர்களை சாகுபடி செய்யலாம். மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யும் நிலத்தை இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.

* முதலில் நிலத்தில் வெற்று உழவாகவும், இரண்டாவது முறை விதைப்பு உழவும் மேற்கொள்ள வேண்டும்.

* உழவு மேற்கொண்ட நிலத்தில் தரமான நாட்டு விதைகளை விதைக்க வேண்டும். மேலும் இந்த சாகுபடியில் கிடைத்த விதைகளை அடுத்த சாகுபடிக்கு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* நிலத்தில் உழவு மேற்கொள்ளும் போது அடிவுரமாக ஆடு மற்றும் மாடு எரு போன்றவற்றை வெளியில் வாங்க கூடாது. அதற்கு நாமே ஒரு ஏக்கருக்கு ஒரு நாட்டு மாடு வீதம் வளர்த்து வந்தால் போதுமானது ஆகும்.

* மேலும் அந்த நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் எருவை பயன்படுத்துவதால் விவசாய நிலமானது பொன் விளையும் பு மியாகும்.

* அதுமட்டுமல்லாமல் பஞ்சகாவியம், அமிர்த கரைசல், மூலிகைப் பு ச்சி விரட்டி மற்றும் மீன் அமிலங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் நிலத்திற்கு மட்டுமல்லாமல் பயிர்களுக்கு நன்மைபயக்கும் பூச்சிகளையும் பாதுகாக்க முடியும்.

* விதைகளை விதைத்த பிறகு பயிர்கள் வளரும் போது இடையில் களைகளும் வளரும். இந்த சமயங்களில் களை எடுக்க வேண்டும்.

* மேலும் நிலத்தில் உள்ள மண்ணை அடிக்கடி கிளறிவிடுவதால் வேர்களுக்குள் காற்று சுலபமாக செல்லும். இதனால் களைகள் வளராமல் தடுக்க முடியும்.

* கூலிக்கு ஆட்களை வைத்து களைகளை எடுக்க தேவையில்லை. நம் குடும்பத்தை சேர்ந்தவர்களே களை எடுக்கலாம். பயிர் சாகுபடியின் போது ஒரு முறை களை எடுத்தால் போதுமானது ஆகும்.

* கடைசியாக அறுவடை செய்த பிறகு நமக்கு விதை மற்றும் உழவுக்கான செலவு மட்டும் தான், மீதி அனைத்துமே நமக்கு லாபம் தான்.

* இந்த புரிதலோடு பயிர்களை சாகுபடி செய்தால் இயற்கை விவசாயத்தில் நஷ்டமே கிடையாது, எல்லாமே லாபம் தான்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment