Wednesday 9 May 2018

மூங்கில் - பச்சைத் தங்கம் :

நாட்டின் மொத்த காடுகளில் 8.96 மில்லியன் யஹக்டர் மூங்கில் வனம் ( ராய் புற்றும் செளகான் 1990 ). பொதுவாக மூங்கில் காடுகள் கீழ் தளத்தில் காணப்படும். இந்தியாவில் எல்லா விதமான காடுகளிலும் மூங்கில் வளரக்கூடியது. வெப்ப, மிதவெப்ப மற்றும் ஈரக்காடுகளிலும், சராசரி மழை அளவு 1200 மிமீ முதல் 4000 மிமீ மற்றும் வெப்பநிலை 16*c முதல் 18*c வரையுள்ள காடுகளிலும் நன்கு வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 770 – 1080 மீட்டர் வரையுள்ள பகுதிகளில் செழித்து வளரும். எனினும், மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு மூங்கில் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகிறது. மூங்கில் காடுகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவை தனியடுக்குக் காடுகளாகச் சாம்பியன் மற்றும் செத் ( 1968 ) ஆகியோரால் வகைபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, மூங்கில் காடுகளை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவில் 124 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூங்கில்களால் 23 பேரினங்கள் உள்ளன. கொத்துமுறை மூங்கில் சாகுபடி 67 சதவீதம், அவற்றில் கல்மூங்கில் ( டென்ட்ரோகலாமஸ் ஸட்ரிக்ட்ரஸ் ) 45 %, மூன்மூங்கில் ( பாம்பூசாபாம்பூ ) 13 %, டென்ட்ரோகலாமிஸ் ஹாமல்டோனி 7 %, பாம்பூசாடுல்டா 5 % மற்றும் பாம்பூசாபல்லிடா 4 %, மற்றவகை மூங்கில் மொத்தமாக 6 %, மெலக்கன்னாபேசிபெரா, தனி மூங்கில் சாகுபடி 20 % அவை வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும்.

ஒவ்வொரு வகை மூங்கில்களின் பயன்பாடுகளும் கீழே அட்டவணைபடுத்தித் தரப்பட்டுள்ளது.

மூங்கில் தயாரிப்புகள் :

மூங்கில் – கைவேலைப்பாட்டுப் பொருட்கள்
அதிக எண்ணிக்கையிலான குடிசைத் தொழில்கள், முறையே மேசை விரிப்புகள், மூங்கில் உறை, கட்டுகள் ( முடிச்சு ) ஆகியன மூங்கிலை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. நிறைய தினசரி பயன்பாட்டுப் பொருட்களான பாய், கூடை, பொம்மை, தட்டுகள், வலைகள், சுவர்த் தட்டுகள், சுவர் தொங்குகள் ஆகியன மூங்கில் தயாரிப்பே. மூங்கில் தயாரிப்புகள் பலவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. மூங்கிலைக் கொண்டு தயாரிக்கப்படும் பூக்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்கவர் வகையில் உள்ளன. காய்ந்த மற்றும் முதிர்ந்த மூங்கில்த் தாள்கள் மீன் எண்ணெய் வாசனைக்குப் பயன்படுத்தப்படுகிறது. சினருன்டினாரியாபால்கட்டா, மற்றும் ஸ்கிலோடேசியும் பெர்கிராசில் ஆகியன மீன் பிடிகுச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மூங்கில் சேர்க்கை மற்றும் லேமினேசன்கள் :

மரக்கட்டைகளுக்கு இணையான மற்றும் மாற்றாக மூங்கில் கலவைப் பொருட்கள் உள்ளன. மூங்கில்களையும், ரசாயனப்பசைகளையும் கொண்டு தயாரிக்கப்படும் லேமினே­ன் பொருட்கள் சிறந்த முறையில் வீடுகட்டவும் மற்ற அலங்காரமேஜை நாற்காலிகள் செய்யவும் பயன்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், தீங்கு விளைவிக்காததாகவும் இருப்பதோடு சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்திற்கு வழி செய்வதாகவும் இருக்கின்றது.

மூங்கில் தளவாடங்கள் :

மூங்கில் கலவைகளை கொண்டு தயாரிக்கப்படும் தளவாடங்கள் ( தேவையான கருவிகள் ) மேஜை, நாற்காலி போன்றவை மரக்கட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதற்கு இணையான பண்புகளைக் கொண்டுள்ளது. மூங்கில்கள் நாற்காலி, சோபா, புத்தக அலமாரிகள், கேபினட் மற்றும் மேசைகள் செய்வதற்கு ஏதுவானவை.

சந்தை வாய்ப்புகள் :

இப்போது மூங்கில் கலவைப் பொருட்களின் சந்தை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் மட்டுமே அதிகளவில் நடுத்தரமான தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிற்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூங்கில் கலவைச் சாமான்கள் புதுப்பிக்கதக்க, புதுவகையான, சூழலுக்கு உகந்த தயாரிப்பு மற்றும் தேவைக்கு ஏற்ற முறையில் வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதால் இதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

லேமினேட் மூங்கில் தளவாடங்கள் உருவாக்கம்
மூலப்பொருட்கள் :

மூங்கில் கழிகள் ( கோல் ), முக்கியமாக நீள, அகலமானவை அதிக எண்ணிக்கை தரும். மொசோ மூங்கில் ( பில்லோஸ்டாசிஸ் எடுலிஸ் ) அதிக அளவில் கவரப்படுகிறது. இவற்றின் கழிகள் நேரானவை. 10 – 20 மீ நீளமானவை மற்றும் 8 – 20 செ.மீ அகலமானவை. இது போன்ற மற்ற மூங்கில்களும் உபயோகப்படுத்தலாம். சீனாவில் இவை பச்சை கந்தக மூங்கில் ( பி. சல்பியுரா ), அகலமலர் டென்ரோகலாமஸ் ( டெ.ஸட்டிபோரஸ் ) மற்றும் சீனா முள் மூங்கில் ( பாம்பூசாசினோஸ்பைனோச ) எனப்படுகின்றன.

தரமான மற்றும் நிலையான காடுகள் மற்றும் சிறந்த தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கு மூங்கில் அறுவடை வயது மற்றும் காலம் மிக முக்கிய காரணிகள் ஆகும். பொதுவாக முதிர்ந்த மூங்கில் கழிகள் வெட்டப்படும், மொசோ மூங்கில் 5 – 9 வயது கழிகளாக வெட்டப்படும். சேர்க்கை மூங்கில் கழிகள் / டென்ரோகலாமஸ் மற்றும் சீனா முள் முங்கில் 3 – 4 வயது பருவத்தில் அறுவடை செய்யப்படும். முதிர்ந்த மற்றும் தளிர் மூங்கில்கள் தளவாடம் செய்ய ஏதுவானவையல்ல.

மூங்கில் பாய்கள் :

மூங்கில் பாய் தட்டைகள், ஒட்டுப் பலகை போன்று பல அடுக்குகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. மூங்கில் பாய்த் தட்டைகள் ஒட்டுப் பலகைக்கு நிகரான பண்புகளைக் கொண்டிருக்கும். எனவே இவை வீடு கட்டுதல், கதவுகள் தளவாடங்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மூங்கில் பாய்த் தட்டைகள் கவர்ச்சிகரமான, தாங்கும் சக்தி கொண்ட மற்றும் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் எதிர்பானவைகளாகவும், தீத் தடுப்பானாகவும், தாங்குவனவாகவும் உள்ளன.

தயாரிப்பு :

முதிர்ந்த கழிகள் வெட்டப்பட்டு தேவையான அளவுக்கு நீள வாக்கில் 50 முதல் 250 செ.மீ நீளத்தில் வெட்டப்படுகின்றன. இணைப்புப் பகுதிகள் பொதுவாக வெட்டப்படுகின்றன. ஒக்லான்ட்ராட்ராவன் கோரிக்க அதிக தடிமன் கொண்ட மற்றும் குறைந்த இணைப்புப் பகுதி கொண்டது. எனவே இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 40 % ஒட்டுப் பசை தேவைப்படும்.

பலவகையில் மூங்கில்கள் பயன்பட்டாலும், அதன் வகையில் ஏராளமான தேவை இருக்கிறது. எனினும் மூங்கில் சாகுபடி குறைவாக உள்ளதால் அதனைத் தேவையான அளவுக்கு விநியோகம் செய்ய இயலாத நிலையில், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் மூங்கில் வயல் ஓரங்களிலும், வரப்புகளிலும் நடப்படுகிறது.இவ்வகையில் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கம், நகர்ப்புற வளர்ச்சி, நகர் மயமாக்கம் மற்றும் வீடுகள் கட்டுதல், போன்றவற்றால் இதன் தேவை அதிகரித்து வருகிறது.

எனவே விவசாயிகள் வரப்புகளிலும், வீடுகளைச் சுற்றிலும் மண் அரிப்பை தடுக்கப் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குழாய்கள், வாளிகள் மற்றும் பலபொருட்களுக்கு மாற்றாக இயற்கையோடு இயைந்த மூங்கில்கள் பயன்படுத்துகின்றன. வர்த்தகரீதியாகப் பார்க்கும் போதும் மூங்கில்கள் சாகுபடி லாபகரமான ஒரு தொழிலாகவும், விவசாயமாகவும் உள்ளது. இவை மட்டுமின்றி முக்கியமாக மூங்கில் சாகுபடி பல விதமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. சிங் ( 2008 ) அவரது ஆய்வறிக்கையின் படி குறைந்தபட்சம் 5000 கோடி ரூபாய் அளவிலான மூலப்பொருட்கள் ( மூங்கில் ) உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பலவிதமாக மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக ரூபாய் 10,000 கோடி அளவில் மாற்றப்படுகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு மூங்கில்கள் மூலப்பொருட்களாக பயன்படுகிறது. மேலும் மூங்கில்கள் வெகுவேகமாக அழிந்து வரும் தாவரவகையாகும். எனினும் பாம்பூசாடுல்டா வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் வகையில் மிகச் சிறந்த வகையாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment