Wednesday 23 May 2018

என்ன மரம் வளர்க்கலாம்!

சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்க வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். வீட்டை சுற்றிலும் மரங்கள், செடி கொடிகள் இருந்தால், வீட்டின் அழகு மேலும் மெருகு பெறும் - என்ன சந்தேகம்?

ஆனால், வீட்டைச் சுற்றிலும் குறுகிய இடங்களே, இடவசதியே உள்ளது எனில், அதில் மரங்கள் நட்டால் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, வீடு அருகே மரம் நடும்போது, சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக மரங்கள் இரண்டு விதமான வேர்களில் தாங்கி நிற்கின்றன. ஒன்று பக்கவாட்டில் பரவும் வேர். மற்றொன்று ஆணிவேர். பக்கவாட்டில் பரவும் வேர் ரக மரங்களை நடும்போது, கட்டடத்தில் இருந்து குறைந்தது 10 அடி இடைவெளியாவது தேவை. இல்லையெனில், பக்கவாட்டில் பரவும் வேர்களால் கட்டடத்திற்கு ஆபத்து ஏற்படும்.

ஆணிவேர் ரக மரம் எனில், ஐந்து அடி இடைவெளி போதுமானது. அதே நேரத்தில், அனைத்து வகையான மரங்களையும் வீட்டு மனைக்குள் நட்டு வளர்க்கக் கூடாது.

மா, பலா, வாழை, தென்னை, வேம்பு, கொய்யா, புங்கை மரங்களை வீட்டு மனைக்குள் வளர்க்கலாம். ஆலமரம், அரச மரம், வில்வ மரம், பனை, புளி, பாக்கு மரங்களை, வீட்டு மனைக்குள் நட்டு வளர்க்கக் கூடாது.

செடிகளில் எருக்கு, கள்ளி செடிகள் வீட்டு மனைக்குள் வளராதவாறு கவனிக்க வேண்டும். ரோஜா, மல்லிகை, துளசி, குரோட்டன்ஸ், முல்லை, காய்கறி செடிகள், மஞ்சள், செம்பருத்தி போன்றவற்றை வீட்டு மனைக்குள் நட்டு வளர்க்கலாம்.

பொதுவாக, வீட்டு மனையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் மரம் நடுவதை தவிர்க்க வேண்டும். இது காலை வெயில் வீட்டில் விழுவதை தடுக்கிறது. இதனால் காலை வெயிலில் நிறைந்துள்ள வைட்டமின் சக்தி வீட்டில் வசிப்பவர்களுக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. இதற்கு பதிலாக வீட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மரம் மற்றும் செடி, கொடிகளை நட்டு வளர்க்கலாம்.|
மரங்கள் நடுவதற்கு இடவசதி இல்லாதவர்கள், காய்கறி செடிகள், பூச்செடிகள் போன்றவைகளை வளர்த்து வீட்டின் அழகை கூட்டலாம். மரம் என்பது இயற்கை தந்த வரம். மனிதன் தன் சந்ததிக்கு, உலகிற்கு மிக எளிமையாக செய்யக் கூடிய நன்மை மரம் வளர்ப்பது.
மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! மண் வளம் காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! நம் சந்ததியினரை காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! அனைத்து உயிரினங்களையும் காப்போம்...!!!
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்...!!!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment