Monday 21 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 4

நாய்க்குட்டிகளைப் பராமரிக்கும் வழிமுறைகள் :

1. குட்டிகள் பிறந்தவுடன் செய்ய வேண்டியவை
2. முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள்
3. குட்டிகள் வளர்ப்பதற்குத் தகுந்த இடம்
4. நாய்க்குட்டிகளின் இருப்பிடம்
5. நாய்க்குட்டிக்கான உணவுப் பழக்கங்கள்
6. நாய்க்குட்டிகளுக்கான உணவுகள்
7. தேவையான பொருள்கள்
8. நகங்கள் பராமரிப்பு
9. காதுகளைச் சுத்தப்படுத்துதல்
10. கண்கள் பாதுகாப்பு
11. பற்கள் பராமரிப்பு
12. தடுப்பூசி விபரம்
13. குடப்புழு நீக்கம்

குட்டிகள் பிறந்தவுடன் செய்ய வேண்டியவை :

1. குட்டிகள் பிறந்தவுடன் அதன் மூக்கு மற்றும் வாய்ப் பகுதியில் உள்ள திரவத்தைத் தூய்மையான துணியினை வைத்து நன்றாகக் துடைக்க வேண்டும். ஏனேன்றால் நன்றாக மூச்சு விடுவதற்கு இது ஏதுவாக இருக்கும். அது தொடர்ந்து மூச்சு விடுவதற்காக நெஞ்சுப் பகுதியை மெதுவாகத் தேய்த்து விட வேண்டும்.

2. குட்டியின் வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள தொப்புள் கொடியை 3 செ.மீ. இடைவெளி தூரம் விட்டு வெட்ட வேண்டும். அவ்வாறு வெட்டும்போது அதிகமாக இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதைச் சுற்றித் தையல் போட வேண்டும்.

3. பிறந்த குட்டி சுறுசுறப்பாக இருக்கும்வரை வெதுவெதுப்பான தொட்டியில் வைக்க வேண்டும். குட்டி நன்றாக மூச்சு விட ஆரம்பித்த உடன் அதனை வெதுவெதுப்பான பெட்டியில் இருந்து மாற்றி வைக்க வேண்டும்.

4. பிறந்த குட்டியின் கண்கள் மூடிய நிலையில் இருக்கும். 10-14 நாட்களுக்குப் பிறகு குட்டி கண்களைத் திறக்கும். குட்டிகள் பால் குடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். குட்டி பிறந்த சில நாட்கள் வரை 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும்.

5. குட்டிகள் இறப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உடலின் வெப்பநிலை குறைவாக இருப்பது. குட்டி பிறந்த சில நாள்கள் வரை 77 – 86 வரை வெப்பநிலை இருக்க வேண்டும். குட்டிகள் இருக்கும் தரையை வெதுவெதுப்பாக வைத்திருக்க வேண்டும்.

6. தொப்புள்கொடி உள்ள பகுதியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

7. தினமும் குட்டியின் உடல் எடையைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் நன்றாக உள்ள குட்டிகளுக்கு 5-10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். உடலின் எடை குறைந்தால் குட்டிகளுக்கு நோய் உள்ளது என்று அர்த்தம்.

8. கண் மற்றும் மூக்குப் பகுதிகளில் இருந்து எந்தவிதமான திரவமும் வராமல் இருக்க வேண்டும்.

9. குட்டிகள் படுப்பதற்காகப் பயன்படுத்துகின்ற பொருள்கள் விலை மலிவாகவும், சுத்தம் செய்வதற்கு எளிமையாகவும் இருக்க வேண்டும். பயன்படுத்துகின்ற பொருள்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.

10. முதல் மூன்று வாரத்திற்குக் குட்டிகள் சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் தாய்நாய் குட்டியை நக்குவதன் மூலம் சுத்தம் செய்யும். மூன்று வாரத்திற்குப் பிறகு தாயின் உதவி இல்லாமல் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்.

முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் :

* நாய்க்குட்டிகள் வைப்பதற்கான இடத்தில் உடைந்த பொருள்கள் எதுவும் இருக்கக் கூடாது.

* எலக்ரிக்கல் பொருள்கள் இருந்தால் உயரமாகவோ அல்லது மூடி வைத்திட வேண்டும்.

* கீழ்ப்புறமாக உள்ள சன்னல்களை மூடி வைக்க வேண்டும்

* நச்சுப்பொருள்கள், வேதிப் பொருள்கள் அந்த அறையில் இருக்க கூடாது. வேதிப்பொருள்கள் கொண்டு தரையைச் சுத்தம் செய்யக் கூடாது.

குட்டிகள் வளர்ப்பதற்குத் தகுந்த இடம் :

* குளியல் அறை தகுந்த இடம், ஏனென்றால் சாதாரணமக இந்த இடம் வெப்பமாகவும் எளிதில் சுத்தம் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

* இரவு நேரங்களில் நீங்கள் தூங்கும் அறையில் நாய்க் குட்டிகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

நாய்க்குட்டிகளின் இருப்பிடம் :

நாய்க்கூண்டு சரியான அளவில் வடிவமைக்கப்பட்டிருத்தல் அவசியம். பாதுகாப்பாகவும், சுகாதாரமானதாகவும் அமைவது நல்லது. பூச்சிகள் அணுகா வண்ணம் கூண்டைச் சுற்றி வாய்க்கால் அமைத்துச் சுத்தமான புதிய தண்ணீரால் நிரப்ப வேண்டும். தொற்று கிருமி, கிருமிநாசினி மூலம் தரையைத் தினசரி சுத்தம் செய்ய வேண்டும். நாயின் இருப்பிடக் கூண்டு 40 சதுர அடிக் பரப்பிலும் அதே அளவில் பயிற்சி இடமும் அமையப் பெருவது சாலச் சிறந்தது.

நாய்க்குட்டிக்கான உணவுப் பழக்கங்கள் :

* இரண்டு பாத்திரங்கள் வைத்திருக்க வேண்டும். ஒன்று சாப்பாட்டிற்கு, மற்றொன்று தண்ணீர் குடிப்பதற்காக.

* இரண்டு அல்லது மூன்று நாய்க்குட்டிகள் வைத்திருந்தால் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே பாத்திரங்கள் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அது சண்டை போடுவதைத் தடுப்பதற்காக, உணவு மற்றும் தண்ணீர்ப் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நாய்க்குட்டிகளுக்கான உணவுகள் :

* பால், தயிர் சாதம், வேகவைத்த வீட்டு உணவுகளைக் கொடுக்கலாம். உணவில் தீடீரென மாற்றம் செய்யக் கூடாது. சில நாள்கள் கழித்து உணவுப் பொருள்களை மாற்றிக் கொள்ளலாம்.

* வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அந்த உணவுப் பொருள்களைக் கொடுக்கக் கூடாது.

* செயற்கை நறுமணப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட பொருள்களைக் கொடுத்தால் சில நாய்களுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

* ஒரு நாளில் 3-5 முறை உணவுகள் நாய்களுக்கு கொடுக்க வேண்டும்.

உணவின் அளவு, இனம், பாலினம் மற்றும் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும்.

6-12 வாரங்கள் : 3-4 முறை தினமும்

12-20 வாரங்கள் : 3 முறை தினமும்

20 வாரங்களுக்கு மேல் : 2 முறை தினமும்

வணிக உணவுகள் :

தற்போது உலர்ந்த, பகுதி ஈரத் தன்மையுள்ள மற்றும் கலன்களில் அடைத்து வைத்துள்ள உணவுகள் என மூன்று வகையான நாய் உணவுகள் வணிக நோக்கில் கிடைக்கின்றன. உலர் உணவில் மக்காச்சோளம், எலும்பு, சோயாபீன் கோதுமைத் தவிடு, இறைச்சி போன்றவை உள்ளடங்கும். பகுதி ஈரத் தன்மை உணவுகளில் மக்காச்சோளம், இறைச்சியின் துணைப் பொருள்கள், சோயாபீன் போன்ற வகைகள் உண்டு.

கலன்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுகளில் இருவகை உள்ளன :

* அன்றாட உணவு : இதில் பார்லி, இறைச்சி, துணைப் பொருள்கள், கோதுமை மற்றும் சோயா மாவு உள்ளது.

* இறைச்சி வகை உணவு : இதில் இறைச்சி துணைப் பொருள்கள், கோழி இறைச்சி மற்றும் சோயா மாவு உள்ளது.

உலர் உணவில் 10 விழுக்காடு ஈரப்பதமும், பகுதி ஈரப்பத உணவில் 30 விழுக்காடும், கலனில் அடைக்கப்பட்ட உணவில் 75 விழுக்காடும் ஈரப்பதம் உள்ளது.

உலர் உணவிகள் விலை குறைவாகவும், பயன்படுத்த எளிதாகவும், விரைவில் கெடாமலும் உள்ளன. அத்தோடு நாய்களின் பற்களைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

தவிர்க்க வேண்டிய பொருள்கள் :

திராட்சை, வெங்காயம், டீ, சாக்லேட், இஞ்சி, காளான்.

எலும்புகளைக் கொடுத்தல் :

* சிறிய எலும்புகளைத் தவிர்த்து, பெரிய எலும்புகளைச் சுத்தம் செய்து 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து வாரம் இருமுறை நாய்களுக்குச் சுவைக்கக் கொடுக்கலாம். இதனால் நாயின் பற்கள் சுத்தமாவதுடன் தேவையான சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.

* சிறிய எலும்புகள் வாயின் உட்புறத்தில் காயம் ஏற்படுத்துவதோடு சில சமயங்களில் தொண்டையை அடைத்துவிடும் அபாயமும் உண்டு.

* தேவையான அளவு சுத்தமான நீரைக் கொடுக்க வேண்டும். எப்பொழுதும் பாத்திரத்தில் முழுமையாகத் தண்ணீர் இருக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் குடித்தவுடன் குட்டிகள் உடனடியாகச் சிறுநீர் போவதைக் கவனிக்க வேண்டும்.

நாய்களுக்கு கொடுக்க கூடாத உணவு பொருட்கள் பற்றிய காணொளியை இந்த லிங்கில் தமிழில் காணலாம் : https://www.youtube.com/watch?v=pgEx8Z349rs

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தேவையான பொருள்கள் :

* பிரிஸ்டல் பிரஷ், சீப்பு, ரப்பர் கிளவுஸ், நகம் வெட்டி, நாய் ஷேம்பு, நாய் டூத் பிரஷ், நாய் டூத் பேஸ்ட் மற்றும் டவல்.

* நாய்க்குட்டிகளை எப்பொழுதும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். மூடி மற்றும் தோல் பகுதியை எப்பொழுதும் கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.

* குட்டியின் எல்லாப் பகுதிகளில் குறிப்பாக வயிற்றுப் பகுதி மற்றும் பின் கால் பகுதிகளில் தேய்த்துக் குளிக்க வைக்க வேண்டும்.

* குட்டியாக இருக்கும்போது துண்டு மூலம் துடைத்து எடுக்க வேண்டும். முகம் மற்றும் கால்களில் பிரஷ் செய்யும்போது கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது வலியை உண்டாக்கும்.

* குட்டிகளை அடிக்கடி குளிக்க வைக்கக் கூடாது. ஏனென்றால் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியின் அளவு குறைந்து தோல் மற்றும் முடி வறண்டு விடும்.

* வாரத்திற்கு ஒருமுறை குளிக்க வைக்க வேண்டும். கோடைக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும்.

* தோலில் பொடுகு, பேன், உண்ணி எல்லாம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* சலவைப் சோப்புகளை எப்பொழுதும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நாய்களுக்கு அழற்சியை உண்டாக்கும்.

* குட்டிகளின் தோல் பகுதி எப்பொழுதும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும்.

* செல்லப்பிராணிகளுக்கென வகை வகையான மருத்துவக் குணம் மற்றும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் ஷாம்புகள் இருக்கின்றன. ஷாம்பு உபயோகிக்கும் போது அவை நாய்களின் கண்களில் படா வண்ணம் பாதுகாப்பாகக் குளிக்க வைக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

நகங்கள் பராமரிப்பு :

* எப்போதாவது நாய்களின் விரல் நகங்களை வெட்டிவிட வேண்டும். எத்தனை நாளைக்கு ஒரு முறை நகம் வெட்டிவிட வேண்டும் என்பது நாய் வளர்க்கப்படுகின்ற தரையைப் பொருத்தே அமையும்.

* வீட்டிற்கு வெளியே வளர்க்கும் நாய்களின் நகங்கள் இயற்கையாகவே கீழ்நோக்கி நிலத்தைப் பற்றிப் பிடிக்கும் வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு அவ்விதம் அமைந்திருக்காததால் நாம் தான் அதன் நகத்தை அடிக்கடி ஆராய்ந்து சீர்செய்ய வேண்டும்.

* நகம் வெட்டும் கருவிகள் செல்லப் பிராணிகளுக்கான கடையிலோ கால்நடை மருத்துவரிடமோ கிடைக்கும். அவற்றைக் கொண்டு நகம் வெட்டும்போது நகங்கள் சேதமுறாமல், வலி ஏற்படாமல், இரத்தக் காயம் ஏற்படாமல் இருப்பது அவசியம். நகவெட்டிகள் கூர்மையாக இருத்தல் மிக அவசியம். அப்போது தான் அவை நகத்தை நசுக்காமல் வெட்டும்.

* வெண்ணிற நகமுடைய நாய்களில் இரத்த ஓட்டம் இருக்கும் இடம் வரை தெளிவாகத் தெரியும். கருநிற நகமுடைய நாய்களில் இந்த இடம் தெளிவாகத் தெரியாது. ஆதனால் இரத்த ஓட்டம் இருக்கும் இடத்தை வெட்டி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

* இவற்றையும் மீறி இரத்தம் வந்தால் இரத்தம் உறையும் மருந்தைப் பூச வேண்டும்.

காதுகளைச் சுத்தப்படுத்துதல் :

* மாதமொருமுறை காதுகளைச் சுத்தம் செய்வது சிறந்தது. பஞ்சு அல்லது மெல்லிய துணிகளைக் கொண்டு காது சுத்தம் செய்வதற்கான பிரத்யேகமாக விற்கப்படும் மருந்தை உபயோகிக்க வேண்டும்.

* கூரிய பொருள்களைப் பயன்படுத்தாமல் விரலைக் கொண்டு சுத்தம் செய்தால் காதுகளில் காயம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* நீள முடிகொண்ட நாய்களின் காதுகளை அடிக்கடிப் பரிசோதிப்பது நல்லது. ஏனெனில் முடிகள் சிக்குப் பிடித்துக் காதுகளின் துவாரத்தை அடைத்துக் காற்றோட்டத்தைக் குறைத்துக் காது வீக்கம் ஏற்படுத்தும்.

கண்கள் பாதுகாப்பு :

* போரிக் அமிலக் கரைசல் (அ) கண்களைச் சுததிகரிக்கும் திரவங்களால் கண்களைப் பாதிக்கும் காரணிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.

* நீண்ட முடியைக் கொண்ட நாய்களுக்குச் சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் முடி கண்களில் விழுந்து உறுத்தும்.

* வேட்டை நாய்கள் மற்றும் வெளியேற்றறும் நாய்களின் கண்களில் உறுத்தும் பொருள்கள் ஏதும் உள்ளதா என்பதை ஒவ்வொரு முறை வெளியே சென்று வரும்போதும் ஆராய வேண்டும்.

* பாதிப்பு அதிகமாக ஏற்படும்போது உடனே கால்நடை மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சாலச்சிறந்தது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பற்கள் பராமரிப்பு :

* பொதுவாக நாயின் பற்களில் சொத்தை ஏற்படாது. ஆயினும் பற்களில் கிருமித் தொற்றும் மற்றும் மஞ்சள் கறை உருவாகும்போது பற்சிதைவு ஏற்பட்டு அதிக வலி மற்றும் பல் இழப்பு நேரும்.

* வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சிறிய பல்துலக்கும் பிரஷ் கொண்டு நன்கு துலக்க வேண்டும்.

* பற்பசை, உப்பு நீர் அல்லது சோடா உப்பு போன்றவற்றைக்கொண்டு பல் ஈறு மற்றும் பற்களை முழுமையாகச் சுத்தமாகத் தவறாமல் துலக்கினால் பல பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.

* மஞ்கள் கறையை நீக்காவிடில், கடினப் படிவமாகி எளிதில் நீக்க இயலாத நிலை ஏற்படும். அப்போது கால்நடை மருத்தவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

* சந்தையில் கிட்டும் சில உணவுப் பொருள்களாலும் மஞ்சள் கரைப் படிவு ஏற்படும். நாய்கள் மென்று தின்பதை விரும்புவதால் பற்கள் பொதுவாகச் சுத்தமாகி, கூர்மையாகும். செய்றகை எலும்புகள், மெல்லும் பொம்மைகள் நாய்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதுடன் பற்களுக்கு நன்மையும் பயக்கும்.

தடுப்பூசி விபரம் :

* குட்டி பிறந்த 45 –ஆவது நாளில் முதல் தடுப்பூசி போட வேண்டும். இரண்டாவது தடுப்பூசி 21 நாள்கள் இடைவெளிவிட்டுப் போட வேண்டும்.

* மூன்றாவது தடுப்பூசி 21 நாள்கள் இடைவெளி விட்டுப் போட வேண்டும்.

* 4 – ஆவது மாதத்தில் வெறிநோய்த் தடுப்பூசி போட வேண்டும். (பார்போ, எலிக் காய்ச்சல், டிஸ்டம்பர், எப்படைடிஸ், பாரா இன்ப்ளுயின்சா)

நாய் குட்டிகளுக்கான, தடுப்பூசி கால அட்டவனை பற்றிய காணொளியை இந்த லிங்கில் தமிழில் காணலாம் : https://www.youtube.com/watch?v=K5S3MoAFYHM

தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றிய காணொளியை இந்த லிங்கில் தமிழில் காணலாம் : https://www.youtube.com/watch?v=JMJb_FflLdE

தடுப்பூசி போடாத நாள் கடந்த நாய் (adult dog) மற்றும் நாய்க்குட்டிகளுக்கு, தடுப்பூசி போட வேண்டுமா? இந்த லிங்கில் தமிழில் காணலாம் : https://www.youtube.com/watch?v=wQT_hCRi3Ek

குடப்புழு நீக்கம் :

* நாய்க்குட்டிகளுக்குத் தவறாமல் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் ஒரு சில ஒட்டுண்ணிகள் நாய்களில் இருந்து மனிதனுக்கு பரவக் கூடியது.

* முதல் குடற்புழு நீக்கம் 30 – ஆவது நாளில் பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். மூன்று மாதம் வரை 15 நாள்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

* 3 மாதங்களுக்கு பிறகு மாதம் ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும்.

* ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நாய்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மாத்திரை கொடுக்க வேண்டும்.

* முறையாக பூச்சி மருந்து கொடுக்காவிட்டால் உடலில் உள்ள ஒட்டுண்ணியானது குட்டிகளின் ஒடல் எடையைக் குறைத்து இரத்தச் சோகையை உண்டாக்கும்.

* நாய்க்குட்டிகள் பல் வளரும்போது வீட்டில் உள்ள சோபா, நமது கால், கை, விரல் மற்றும் வீட்டில் உள்ள தேவையற்ற பொருள்களை எல்லாம் கடித்துக் கொண்டிருக்கும். அவற்றை நிவர்த்தி செய்ய விளையாடும் பொருள்களைக் கொடுக்க வேண்டும். மேலும் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட மெல்லும் பொருள்களைக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது நம்மைக் கடிப்பது நின்று விடும் அல்லது குறையும்.

* நாய்க் குட்டிகளுடன் நாம் நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அவற்றிற்குத் தன்னுடைய எஜமான் யார் என்பது தெரியும். மேலும் எதிர்காலங்களில் பாசப்பிணைப்பு ஏற்படும். எஜமான் சொல்வதையும் கேட்கும்.

நாய்களில் குடற்புழு நீக்கம் பற்றிய காணொளியை இந்த லிங்கில் தமிழில் காணலாம் : https://www.youtube.com/watch?v=BAaxfd8NWS0

மேலும் நாய் வளர்ப்பு பற்றிய காணொளிக்கு இந்த லிங்கில் டாக்டர் கிஷோர் குமார். MVSc., அவர்களின் காணொளியை தமிழில் காணலாம் : https://www.youtube.com/user/drkarnakishor

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment