Monday 26 March 2018

செல்லக்கிளியே!

வீட்டில் கிளி வளர்ப்பது ஒரு கலை. உங்கள் செல்லக் கிளியை எப்படி கவனமாகப் பராமரிக்கணும்னு தெரிஞ்சுக்குங்க.

* கிளி வளர்க்கும் இடத்தில் சரியான வெப்ப நிலை இருக்கணும். ஏ.சி ரூம், கிச்சன் மாதிரி ரொம்ப சூடான இடங்களில் கிளிகளை வளர்க்கக் கூடாது.

* தினமும் குறிப்பிட்ட நேரத்தை கிளிக்காகச் செலவிடுங்கள். நாம் பேசுவதை திருப்பிச் சொல்ல, நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொடுங்கள்.

* கிளி வளர்க்க, கூண்டு ரொம்ப முக்கியம். கிளி ஏறி விளையாட, நடக்க வசதியா இருக்கணும். வட்ட வடிவிலான கூண்டுகளைவிட, மூலைகள் இருக்கும் சதுரம் அல்லது செவ்வக வடிவக் கூண்டுகளே நல்லது.

* சிறிய பந்து, கிளை உள்ள மரக்குச்சி போன்றவற்றை கூண்டுக்குள் வையுங்கள். கிளி விளையாடுவதற்கு உதவும்.

* கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு, அவ்வப்போது கூண்டைத் திறந்து பறக்கவையுங்கள். எங்கே பறந்தாலும் உங்கள் தோள்களில் வந்து அமர பயிற்சி கொடுங்கள்.

* கிளிகளைக் கொஞ்சும்போது அலகு, சிறகுகள், உடலை மிக மெதுவாகத் தொடவும்.

* கூண்டினுள் எறும்பு மற்றும் மற்ற பூச்சிகள் போகாதவாறு கூண்டை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ளவும்

* குறைந்தது வாரம் இரண்டு முறையாவது கூண்டை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

* தண்ணீர், தீவனம் வைக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்வது அவசியம்.

* எப்பவும் சுத்தமான தீவனங்கள, பழங்களை உணவாகக் கொடுங்கள். கூண்டில், ஒரு கிண்ணத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கட்டும்.

* பறவைகள் கூட்டமாக வாழ்ந்து பழக்கப்பட்டவை. கிளிகளை, வீட்டில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான், தான் தனியாக இருக்கும் உணர்வு கிளிக்கு ஏற்படாது.

முக்கிய குறிப்பு : பச்சை கிளிகள், சில்லை, சிட்டுக்குருவிகள், மைனா போன்ற இந்திய இன பறவைகளை புடிப்பதோ, வளர்ப்பதோ, விற்பனை செய்வதோ வன துறையின் சட்ட படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகையால் எஸோடிக் (Exotic Birds) பறவைகளை வாங்கி வளர்க்கவும்.

Subscribe us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

3 comments:

  1. கிளிகள் ஏன் அதிகம் பயபடுகிறத

    ReplyDelete
  2. Baby parrot hand feed spoon use pannalama

    ReplyDelete