Tuesday 6 March 2018


காப்பி செடி பயிரிடும் முறை மற்றும் பயன்கள் :


காப்பி உலகில் மிகவும் அதிகமாக பருகும் நீர்ம உணவுகளில் ஒன்றாகும். காப்பிச் செடிப் பேரினம் ரூபியேசியே என்னும் குடும்பத்தை சேர்ந்தது.

ஆப்ரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் தான் இது முதலில் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எத்தோப்பியாவிலிருந்து எகிப்து மற்றும் எமன் நாட்டிற்கு பரவியது.

அதன் பின்னர் ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டில் பெர்சியா, துருக்கி மற்றும் வாடா ஆப்ரிக்காவிற்கு பரவி பின் அங்கிருந்து ஐரோப்பியாவிற்கும், பிறநாடுகளுக்கும் பரவியது.

காப்பி என்னும் சொல் ஆங்கில சொல்லாகிய coffee என்பதன் தமிழ் வடிவம் ஆகும். காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கோட்டையை பறித்து, பிறகு அரைத்துப் போடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும்.

பயிரிடும் முறை :

ஜூன் – டிசம்பர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்ற காலம் ஆகும்.

காப்பி தோட்டங்களின் மண் 4 .5 முதல் 6 .5 கார அமில நிலை கொண்டதாகவும், அதிக ஆழமுடையதாகவும், அதிக அங்கக பொருள் நிறைந்ததாகவும் இருத்தல் நல்லது. மணல் தவிர்த்து அணைத்து மங்களிலும் பயிர் செய்யலாம்.

இப்பயிரினை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். நோயற்ற நன்கு முதிர்ந்த பழங்களை விதைக்காக தனியாக அறுவடை செய்ய வேண்டும். தண்ணீரில் மிதக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும். நல்ல பழங்களிலிருந்து சதைப்பற்றினை நீக்கி விதையினை தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின்பு மரத்தூள் கலந்து நிழலில் உலர வைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல் :

நல்ல வடிகால் வசதி உள்ள நிலங்களை தேர்ந்தெடுத்து பண்படுத்த வேண்டும். பாத்திகளை தேவையான அளவு நீளமும் 1 மீட்டர் அகலமும், 15 செ. மீ உயரம் இருக்குமாறு அமைக்க வேண்டும். 1 x 6 பரப்பளவுள்ள பாத்திகளுக்கு 5 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ சுண்ணாம்பு இட வேண்டும். களிமண் மற்றும் இதர மண்வகைகளுக்கு மணல் சேர்ப்பதன் மூலம் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி கிடைக்கும்.

விதைகளை டிசம்பர் – ஜனவரி மாதங்களில் 1 அங்குல இடைவெளியில் விதையின் தட்டையான பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு விதைக்க வேண்டும். அதன் பின்னர் மெல்லிய போர்வையாக மணல் இட்டு பின்பு வைக்கோல் கொண்டு மூட வேண்டும். பாத்திகளுக்கு தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலும் நேரடியான சூரிய ஒளியினை கட்டுப்படுத்த பந்தலிட்டு ஒளியினை கட்டுப்படுத்த வேண்டும். விதைத்த 45 வது நாளில் விதைகள் முளைத்துவிடும். பின்னர் அவற்றினை பாலிதீன் பைகளில் நடவு செய்ய வேண்டும்.

விதைக்கும் முறைகள் :

நிழல் தரும் மரங்களை தவிர தேவையற்ற மரங்களை நீக்கி விட வேண்டும். சரிவான நிலப்பகுதிகளில் அடுக்குப் பாத்திகள் அமைக்க வேண்டும். பின்பு 2 மீட்டர் இடைவெளிகளில் 45 x 45 x 45 அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். குழிகளை நன்கு ஆறவிட்டு பின் மேல்மண்ணுடன் 500 கிராம் பாறை உப்பு இட வேண்டும்.

தயார் செய்துள்ள குழிகளில் செடிகளை நடவு செய்ய வேண்டும். செடிகள் பாதிக்காதவாறு பாலிதீன் பைகளில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும்.

காப்பிப் பயிரானது மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் மூலம் நீர் செலுத்துவதன் மூலம் பூக்கள் மலர ஆரம்பிக்கும்.

ஒரு ஏக்கருக்கு ஒரு டன்னுக்கு மேல் மகசூல் தரக்கூடிய செடிகளுக்கு 200 கிராம் அளவுக்கு தழை, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஆண்டிற்கு இரண்டு முறை செடிக்கு 20 கிலோ தொழு உரம் இட வேண்டும்.

களைகளின் அளவை பொறுத்து களை எடுக்க வேண்டும். மேலும் காய்ந்த இலைகளை செடிகளின் வேர்பகுதிகளில் போடா வேண்டும். பருவ மழை முடியும் தருணத்தில் 1 அடி ஆழத்திற்கு கொத்தி விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் இலை மற்றும் களைகள் மண்ணில் புதைந்து நன்கு மக்கி அங்க சத்துக்கள் செடிக்கு கிடைக்கும். காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டி நீக்க வேண்டும்.

அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். காப்பி பழங்கள் பழுத்த உடன் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த பழங்களில் பழுக்காத காய்களை பிரித்து எடுக்க வேண்டும். இதனை தனியாக உலர வைத்து செர்ரி காபியாக பயன்படுத்த்தலாம்.

ஒரு எக்டரில் இருந்து 750 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

பயன்கள் :

மனநிலை, நினைவாற்றல், எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

காப்பி அருந்தாத நடுத்தர வயதினரை விட காப்பி அருந்துவதை வழக்கமாகக் கொண்ட நடுத்தர வயதினருக்கு மறதிநோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

காப்பி மன அழுத்தத்தை எதிர்த்து சிறப்பாக போராடும்.

இதில் உள்ள கார்பைன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகின்றது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment