Sunday 4 March 2018


தூக்கணாங் குருவி :


மிகச் சிறிய பறவையான தூக்கணாங் குருவி அதை அன்றாடம் செய்தவண்ணம் உள்ளது. வெப்பத்திலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கும் வண்ணம் உள்ள கூட்டினை ஆண் குருவி கட்டி அதை மரங்களிலிருந்து தொங்கவிடுகிறது. 

அந்தக் கூடு தொங்கும் அழகை கவிஞர் கண்ணதாசன் “தூக்கணாங்குருவிக் கூடு தூங்கக் கண்டால் மரத்திலே..” என்ற பாடலில் ரசித்துப் பாடியிருப்பார். கூடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பெண் குருவி வந்து அதைப் பார்வையிட்டு திருப்தியான பிறகே ஆண் குருவியின் காதலை ஏற்றுக் கொள்ளுமாம்! இதற்குப் பிறகே ஆண் குருவி உற்சாகமாகக் கூட்டைக் கட்டி முடித்து, குடிபுகுந்து, இனப்பெருக்கம் செய்து, குடும்பத்துடன் வாழத் தொடங்குமாம்!

பெண் குருவி கூட்டை நிராகரிக்கும்போது ஆண் குருவி விரக்தியடைந்து கூட்டைப் பிய்த்துப் போட்டுவிடும் என்கிறார்கள் பறவையியல் வல்லுநர்கள்!கோடை காலம் நெருங்கும்போது தூக்கணாங்குருவிகள் இந்தக் கூடு கட்டும் வேலையைத் தொடங்குகின்றன. அவற்றின் கூட்டை உருவாக்கும் தொழில்நுட்பமும் நேர்த்தியும் அபாரமானது என்பதால் அது கட்டடம் கட்டும் நிர்வாகவியலுக்குரிய உத்தியாகவே தற்போது பார்க்கப்படு கிறது. கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அங்கங்கே வைக்கோல் துண்டுகள் நீட்டிக் கொண்டிராமல் கூடு சுத்தமாக இருக்கும்.

மரக்கிளையிலிருந்து தொங்கவிடுவதற்கு ஒரு வலுவானதோர் வளையம், மேற்கூரை, முட்டைகளை வைக்க ஓர் அறை, நுழைவாயில், உள்ளறைக்குச் செல்ல ஓர் இடைக்கூடம் (antechamber) ஆகியவற்றோடு கூடிய தெளிவான வடிவமைப்புடன் கூட்டைக் கட்டுகிறது ஆண் குருவி. கைதேர்ந்த கட்டடக்கலை நிபுணர் உருவாக்கிய வீட்டின் நேர்த்தி அதில் இருக்கும்.

“இந்தப் பறவைகள் கூடுகளை நேர்த்தியாகக் கட்டுவதற்கான உள்ளுணர்வுடனேயே பிறக்கின்றன. ஒன்றரை ஆண்டுகள் வயதே ஆன பறவைகள் கூட சுரைக்குடுக்கைகள் போன்ற கூடுகளைக் கட்டி மரங்களில் தொங்கவிடும் அழகைப் பார்க்க முடியும்”

கூட்டின் நுழைவாயில் எதிரிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் கீழ்ப்பகுதியில் அமைக்கப்படுகிறது. சூரிய ஒளி புகாமல் தடுக்கக்கூடிய சூரியத் தடுப்புகளை (sunshades) அமைக்கக்கூடிய ஆற்றல் கூட தூக்கணாங் குருவிகளுக்கு உண்டு. தாவர இழைகளை நெய்தே உறுதியான, தண்ணீர் புகாத கூடுகளை அவை கட்டிவிடுகின்றன. தங்களுடைய நகத்தின் உதவியுடன் கிளையைச் சுற்றி தாவர இழையைக் கொண்டு சென்று முடிச்சுப் போட்டு வளையத்தை உருவாக்கும் லாவகம் அவற்றிடம் இருக்கிறது.

இந்த வளையத்தின் மீது மேலும் மேலும் இழைகளைச் சுற்றி விரிவுபடுத்தி மோதிர வடிவில் அமைந்த கூட்டை அவை கட்டி முடிக்கின்றன. கூடு கட்டத் தேவையான இழைகளைக் கொணர நூற்றுக்கணக்கான முறை பயணங்கள் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் அவற்றுக்கு உண்டு. ஒரு சில வாரங்களிலேயே அவை கூட்டைக் கட்டி முடித்துவிடும். அவற்றின் கூடுகள் உறுதியானவை. சில பருவ காலங்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியவை.நான்தான் என் வீட்டை அருமையாகக் கட்டினேன் என்று எவரும் பெருமையடித்துக் கொள்வதற்கு முன் இந்தக் குருவிக் கூட்டை பார்வையிடுவது அவரது தற்பெருமைக்கு வைக்கும் குட்டாக இருக்கும்.

மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! மண் வளம் காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! நம் சந்ததியினரை காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! அனைத்து உயிரினங்களையும் காப்போம்...!!!
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்...!!!

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete