Monday 12 March 2018


7 தலைமுறைகளை தாண்டி நூறு கிளைகளுடன் வாழும் பனைமரம் :


பனை மரம் என்றால் உடனே நம் நினைவுக்கு வரும் அதன் வளர்ச்சி மட்டுமே.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 200 ஆண்டுகள் பழமையான பனை மரம் ஒன்று 7 தலைமுறையாக 100 கிளைகளுடன் காணப்படுவது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 7 தலைமுறையாக இந்த பனை மரத்தை பராமரித்து வருகின்றனர் விவசாயி அப்பாஜி குடும்பத்தினர்.

இந்த பனைமரத்தை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இந்த பனைமரத்தை பற்றி அப்பாஜி கூறும்போது...

"எங்கள் முன்னோர்கள் காசியிலிருந்து ஒரு பனை விதை கொண்டு வந்து இங்கு நட்டு வளர்த்தாங்க. 'இந்த அதிசய பனை மரத்தால் தான் எங்கள் ஊருக்கு பண்ணந்தூர் என பெயர் வந்ததாக அங்கு உள்ள கிராமத்து இளைஞர்கள் கூறுகின்றனர்".

கடந்த ஆண்டு பெய்த கடும் மழை சூறாவளியில் பல மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. ஆனால் இந்த பனை மரத்துக்கு சிறு சேதாரம் கூட இல்லை என்று அப்பாஜி பெருமையுடன் கூறுகின்றார்.

"விஞ்ஞானிகள் பலர் இதன் விதைகளை எடுத்து சென்று பதியமிட்டனர். அனால் செடி வரவில்லை.

அதே நேரம் மற்றொரு செடி இந்த மரத்தின் கீழே முளைத்தது.

அதை தாய் மரத்தின் எதிரே நட்டு வளர்த்தோம். அதிலும் கிளைகளுடன் மரம் வளர தொடங்கியது. வேறு இடத்தில் நட்டுவைத்த எந்த விதையும் வளரவில்லை" என்றனர்.

"வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, "மரபணு மாற்றத்தால் இதை போல் அதிசயங்கள் நிகழும்" என்றனர்.

பனை மரங்களை காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! மண் வளம் காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! நம் சந்ததியினரை காப்போம்...!!!
மரம் வளர்ப்போம்...!!! அனைத்து உயிரினங்களையும் காப்போம்...!!!
பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்...!!!

No comments:

Post a Comment